×

இ-சிகரெட் வைத்திருப்பது சட்ட மீறல்: சுகாதார அமைச்சகம் அறிவிப்பு

புதுடெல்லி: இ சிகரெட்டுக்கள் மற்றும் அதுபோன்ற சாதனங்களை வைத்திருப்பது மின்னணு சிகரெட் தடை சட்டத்தை மீறும் செயலாகும் என்று சுகாதார துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. நாட்டில் 2019ம் ஆண்டு இ-சிகரெட் தடை சட்டம் அமல்படுத்தப்பட்டது. இதன் மூலமாக தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தனிநபர் இ-சிகரெட் பயன்பாடு குறித்து தடை சட்டத்தில் வெளிப்படையாக எதுவும் குறிப்பிடப்படவில்லை என்பதால் சிலர் இதனை ஆன்லைனின் பெற்று பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இ-சிகரெட்டை எந்த வடிவத்தில் வைத்திருந்தாலும் அது தடை சட்டத்தை மீறும் செயலாகும் என்று ஒன்றிய சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சுகாதார துறை அமைச்சகம் கூறுகையில்,‘‘இ சிகரெட் உற்பத்தி, இறக்குமதி, ஏற்றுமதி, போக்குவரத்து, விற்பனை, விநியோகம், சேமிப்பு மற்றும் விளம்பரம் ஆகியவற்றை தடை செய்வதற்காக சட்டம் இயற்றப்பட்டுள்ளது. எனவே இ-சிகரெட் 2019 சட்ட விதிகளை மீறாமல் நாட்டிற்குள் இ-சிகரெட் வைத்திருப்பது சாத்தியமில்லை. தனிநபர் இ சிகரெட் வைத்திருந்தால் சட்ட விதிகளை மீறுவதாக கருதப்படும். இது குறித்து விமான போக்குவரத்து துறை அமைச்சகத்துக்கும் விளக்கம் அனுப்பப்பட்டுள்ளது. இது தடையை அமல்படுத்துவதை மேலும் வலுப்படுத்தும்” என தெரிவித்துள்ளது.

The post இ-சிகரெட் வைத்திருப்பது சட்ட மீறல்: சுகாதார அமைச்சகம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Ministry of ,New Delhi ,Ministry of Health ,Dinakaran ,
× RELATED ஆண்டுதோறும் ஆய்வு செய்து...